திருச்சியில் சித்திரைத் திருவிழா கடந்த 10-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. (படம்: கதிரவன் - திருச்சி) அம்பாளும், தாயுமானவர் (சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்கக்குதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளினர். (படம்: கதிரவன் - திருச்சி) 14-ம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். (படம்: கதிரவன் - திருச்சி) விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. மேஷலக்னத்தில் மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். (படம்: கதிரவன் - திருச்சி) மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக சண்டிகேஷ்வரர் பரிவாரா மூர்த்திகள் சிறு தேரில் சென்றன. (படம்: கதிரவன் - திருச்சி) தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். (படம்: கதிரவன் - திருச்சி) நான்கு சித்திரை வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் தாயுமானவர் சன்னதிக்குச் சென்றடைந்தார். (படம்: கதிரவன் - திருச்சி) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் கண்டனர். (படம்: கதிரவன் - திருச்சி) விழாவையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுபட்டு இருந்தனர். (படம்: கதிரவன் - திருச்சி)