(பீதி பொத்தான்) Emergency panic button அழுத்தியதும், பல்லவன் சாலையில் உள்ள MTC தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு எச்சரிக்கை அனுப்பப்படும் என்றும் அதன் மூலமாக பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மையத்தில் உள்ள கண்காணிப்பு குழுவினர் நேரலை வீடியோ காட்சிகளைக் கண்காணித்து, உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கையை அனுப்ப முடியும், இதனால் அருகிலுள்ள எந்த ஒரு ரோந்து வாகனமும் எந்த நேரத்திலும் அந்த பேருந்தை உடனடியாக வந்தடைய முடியும்.
தமிழகத்தில் கடந்த சில மாதத்தில் அரசு பேருந்துகளில் நடந்த நிகழ்வுகள் அரசுக்கு பெரும் அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளதன. பழங்குடியினர் சமூகமான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பயணிகளை நடத்துனர் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது. அதேபோல் மீன் வியாபாரம் செய்யும் பெண்ணை மீன் வாடை வீசுவதாக கூனி அவமானப்படுத்தி பேருந்தில் இருந்து கியே இறக்கி விட்ட சம்பம் வைரலானது. இவற்றை தடுக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர் - கண்ணியப்பன் - அம்பத்தூர்