திருவண்ணாமலையைச் சேர்ந்த சின்னதுரையும், கோவையைச் சேர்ந்த ஸ்வேதாவும் சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகின்றனர்.
2/ 8
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இந்த ஜோடி தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்பியுள்ளனர்.
3/ 8
இதற்காக, புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் அரவிந்தை அணுகியுள்ளனர்.
4/ 8
ஆழ்கடலில் திருமணம் செய்வது என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.
5/ 8
நிச்சயிக்கப்படி கடந்த 13ம் தேதி திருமண உடையில் படகில் சென்ற இருவரும், நீலாங்கரை அருகே உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கடலில் இறங்கி, கடல் நீரில் நீந்தியபடியே மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
6/ 8
திருமணத்தை முன்னிட்டு, ஆழ்கடலுக்குள் இருக்கும் செடிகளில் பூக்களைக் கொண்டு மணமேடை அமைக்கப்பட்டிருந்தது.