ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முத்தம்மாள் காலனியில் திறந்த வேனில் சென்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட மக்கள் குறை சம்பந்தமாக இதுவரை தன்னை சந்தித்து மனு கொடுத்ததில்லை என்று விமர்சித்தார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் கனவிலே இருப்பதாக விமர்சித்தார்.
தொடர்ந்து புன்னம்சத்திரம் 4 ரோடு பகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றால் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு 3 சென்ட் நிலம் வழக்குவதாக வேட்பாளர் செந்தில் பாலாஜி அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டினார். இந்த திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததும் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்தார்.
அப்போது பேசிய அவர், சசிகலா சிறை சென்றபோது அவர் நினைத்திருந்தால் தன்னைக் கூட முதலமைச்சராக நியமித்திருக்க முடியும் என்று கூறினார். ஆனால், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்பதாலேயே பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதாகக் கூறினார்.