இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை கலந்து கொள்ள வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்தனர். இதனை கண்ட வானதி சீனிவாசன் " தெரியாமல் இன்று கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன்" என புன்னகைத்தபடியே உள்ளே சென்றார்.