கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ராஜேஷ் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைக்க இருந்தார்.பேரணி நடைபெற இருந்த நிலையில், கரூர் மாவட்டம் காவல்துறையினர் அனுமதி மறுத்து பேரணி நடத்தவிடாமல் சாலை இருபுறம் தடுக்கப்பட்டது. 2 ஏடிஎஸ்பி தலைமையில், 4 டிஎஸ்பி, 5 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர், பாஜக இருசக்கர வாகன பேரணி தடுக்கும் வகையில் ஈடுபட்டனர்.
பேரணிக்கு அனுமதி மறுத்ததால் பாஜகவினர் அப்பகுதியில் உள்ள வீடு இடுக்குகள், மற்றும் சந்து பகுதிகளில், காட்டு பகுதிகளில் நுழைந்து பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணியாக கரூர் பேருந்து நிலையம் வந்தனர். இந்த நிலையில் நகரப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக வந்த பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மற்றும் பாஜக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
கரூர் நகர பகுதிகளில் போலீசார் ஆங்காங்கே தடுத்து பாஜகவினரை கைது செய்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கரூர் பேருந்து நிலையம் அருகே கைது செய்யும் பணியில் ஈடுப்பட்டதால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.