பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி - சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன், கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு திருமணம் நடைபெற்றது.
முன்னதாக, ராமதாஸ் - சரஸ்வதி அவர்களின் இளைய மகள் கவிதா - மருத்துவர் இரா.ஜெயகணேஷ் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் ஜெ. நிதர்ஷனுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல இணை செயலாளரும், முன்னாள் தொடர்வண்டித்துறை இணை அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி - பத்மினிதேவி இணையரின் மகள் ஏ.கே.சமித்ராவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.