அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சுமார் 2,665 பேர் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒற்றை தலைமை குறித்த விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு இடையே கடந்த சில நாட்களாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இருவரும் ஒன்றாக இக்கூட்டத்தில் பங்கேற் முன்னதாக வீட்டில் இருந்து புறப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செயற்குழு- பொதுக்குழு நடைபெறும் தனியார் திருமண மண்டபம் முன்பு ஆகிய கணக்கான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இதேபோல், ஓபிஎஸ், இபிஎஸ் வருகை ஆகியவை காரணமாக மதுரவாயலில் இருந்து வேலப்பன்சாவடி வரை வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்கின்றன. கோயம்பேடு மேம்பாலம் முதல் மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.