கோவையில் 16 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கோவை பி.என்.புதூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடையில் வாடிக்கையாளர்கள் இல்லாத போது, உரிமையாளர் ராமலிங்கம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.