ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலில் 470 ஆடுகளை நேற்று இரவு முழுவதும் வெட்டி காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கறி விருந்து அன்னதானமாக வழங்கி திருவிழா நடைபெற்றது.

 • 18

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  திருப்பரங்குன்றம் - விமான நிலைய சாலையில் உள்ள வெள்ளக்கல் கிராமத்தில் கழுங்கடி முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டி சுவாமிக்கு ஆடுகளை பலியிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 38

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  இந்த முனியாண்டி கோயிலில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கறி விருந்து அன்னதான திருவிழாவாக நடைபெறும். பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட ஆடுகளை இரவு முழுவதும் வெட்டி சமைத்து காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 48

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  இந்தத் திருவிழாவில் நேற்று காலை கிடாவுடன் பொங்கல்பானை ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முனியான்டி கோவில் முன்பு ஆட்டுகிடாய்கள் வெட்டப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 68

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  இந்த முனியாண்டி கோவில் வேண்டியது நிறைவேறும் என்றும்., கொரோனா காலகட்டத்தின் போது கூட எங்கள் வெள்ளக்கல் பகுதியில் ஒருவருக்கு கூட கொரோனா வந்தது இல்லை என்றும் கோவிலில் முதல் முதலாக எங்கள் பிரச்சனை தீர ஒரு ஆடு வெட்டி ஆரம்பித்த கோவில் திருவிழா தற்போது 470-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு இந்த ஆட்டுக் கிடாய் கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES

 • 78

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  இந்த ஆண்டு கழுங்கடி முனியாண்டி கோவிலில் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 470 ஆடுகள் வெட்டப்பட்டு கறிவிருந்து காலையில் தொடங்கி இரவு வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 88

  கோவில் திருவிழாவில் 470 ஆடுகள் வெட்டி கறி விருந்து.. பத்தாயிரம் பேருக்கு அன்னதானம்

  ஆட்டுக் கிடாய் கறி விருந்து திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். செய்தியாளர் : சிவகுமார் தங்கையா

  MORE
  GALLERIES