திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து மதுரை பெரிய ஆலங்குளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அதிமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வைத்து வாக்கு கேட்காமல், தங்களை குறை சொல்லி ஸ்டாலின் வாக்கு கேட்பதாக குற்றம்சாட்டினார்.
அரவக்குறிச்சி தொகுதியில் வேலம்பாடி, இனுங்கனூர், பள்ளப்பட்டி, ஆண்டிப்பட்டிக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை தவிர அதிமுகவினருக்கு வேறு சிந்தனையே இல்லை என குற்றம்சாட்டினார். தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.