ஆழ்கடல் நீச்சல் பயிற்சியின் போது அருகே வந்த திமிங்கல சுறா: கலர்ஃபுல் போட்டோஸ்
அழ்கடலில் 5 நிமிடங்கள் வரை எங்களுடன் சுற்றிவந்த திமிங்கல சுறா மீன்கள் பின்னர் மிகவும் நிதானமாக மீண்டும் ஆழ்கடலுக்கு சென்றது என்று நீச்சல் பயிற்ச்சியாளர் அரவிந்த் கூறினார்.
Web Desk | June 12, 2019, 2:54 PM IST
1/ 8
புதுச்சேரி கடல் பகுதியில் சுற்றிவரும் திமிங்கல சுறா ஆழ்கடல் நீச்சல் பயிற்சியின் போது ஒருவர், அதன் அருகிலேயே சென்று புகைப்படம் எடுத்துள்ளார். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
2/ 8
புதுச்சேரி கடல் பகுதியில் தனியார் நிறுவனம் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி கொடுத்துவருகிறது. தினமும் காலை வேளையில் மாணவர்களை ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
3/ 8
அதுபோல இன்று பயிற்சியின் போது அருகே வந்த திமிங்கல சுறாவை பயிற்சியாளர் அரவிந்த் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
4/ 8
இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்த திமிங்கல சுறாக்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கிப் பழகும் தன்மை கொண்டவை. மேலும் அருகில் சென்றால் கூட யாருக்கும் எந்தவிதத் தீங்கும் செய்யாது என்றார். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
5/ 8
(படம்: இளவமுதன் - புதுச்சேரி)
6/ 8
மேலும் நேற்று படகின் அருகில் மேல் பகுதியில் வந்து சென்றது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த மீன்களின் குணநலன்களைப் பற்றி அறிந்திருந்ததால்தான் நாங்கள் அதன் அருகிலேயே சென்று வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தோம் என்றும் கூறினார். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)
7/ 8
(படம்: இளவமுதன் - புதுச்சேரி)
8/ 8
5 நிமிடங்கள் வரை எங்களுடன் சுற்றிவந்த திமிங்கல சுறாக்கள் பின்னர் மிகவும் நிதானமாக மீண்டும் ஆழ்கடலுக்குச் சென்றன என்றார். (படம்: இளவமுதன் - புதுச்சேரி)