இந்தநிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தும் தோனியின் ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தோனி அவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டும், ஊக்கப்படுத்தும் விதமாக பயிற்சி அகாடமி உருவாக்க வேண்டும். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியதையும் தமிழக மக்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்.. "Captain Dhoni - A Cool and Great Captain"’ என்று குறிப்பிட்டுள்ளார்.