ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஐபிஎல் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் மிகப்பெரிய தொகையை ஷாம் கரன் தட்டி சென்றார். அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஷாம் கரனுக்கு ஐபிஎல் ஏலத்தில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வளவு தொகைக்கு அவர் ஏலத்திற்கு எடுக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.