சர்வதேச ஒலிம்பிக் தினம் 2022 இன்று, 23-6-2022 அன்று கொண்டாடப்படுகிறது. விளையாட்டு, நல்ல ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் மகிழ்ச்சியைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் 23, விளையாட்டின் மூலம் உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற மக்களை அழைக்கிறது. இந்த ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் தின கரு என்னவெனில் 'உலக அமைதிக்காக ஒன்றுபடுவொம்.' சமூக ஊடகங்களில், உலக ஒலிம்பிக் தினம் 2022 #MoveForPeace மற்றும் #OlympicDay என்ற ஹேஷ்டேக்குகளுடன் குறிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு நாளில் ஒலிம்பிக்கில் சாதித்து நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த முக்கியமானவர்களைப் பார்ப்போம்:
இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் ராஜாவாக திகழ்ந்தது 1928 முதல் 1956 வரை அதாவது இந்தக் காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக 6 ஒலிம்பிக் தங்கங்களை வென்றது இந்திய ஹாக்கி அணி. மொத்தமாக இந்திய ஹாக்கி அணி 8 தங்கப்பதக்கம் வென்றுள்ளது. 6 பதக்கங்கள் தொடர்ச்சியாக வென்றது, பிறகு டோக்கியோவில் 1964-ல் மற்றும் மாஸ்கோவில் 1980-ல் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது, சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 2020-ல் வெண்கலம் வென்று அசத்தியது இந்திய அணி.
மேஜர் தயான் சந்த் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஆடியவர். 3 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்த ஹாக்கி மாமேதை. இளம் ஹாக்கி வீரர்கள் இவரிடமிருந்துதான் தங்கள் உத்வேகத்தைப் பெறுகின்றனர். பந்தைக் கட்டுப்படுத்துவதில் ஆகச்சிறந்த வீரர். அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருது - மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது.
நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரது செயல்திறன் குறிப்பிடத்தக்கது மற்றும் பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்தது. உண்மையில், சமீபத்தில் அவர் 89.30 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார்.
பிவி சிந்து
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை ஆவார். அவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், இந்த நிகழ்வில் சுவாரஸ்யமாக அறிமுகமானது மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம். மேலும், ஒலிம்பிக் பைனல்ஸ் வரை சென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மீராபாய் சானு
மீராபாய் சானு 2016 ரியோ ஒலிம்பிக்கில் இருந்து இந்திய ஒலிம்பியனாக தனது வாழ்க்கையை உயரத்துக்குக் கொண்டு சென்றார். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில், பெண்களுக்கான 49 கிலோ எடை தூக்கும் போட்டியில் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றார். மணிப்பூர் வீராங்கனை மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
ரவி குமார் தஹியா - வெள்ளிப் பதக்கம் - ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம். இது ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் ஒன்பதாவது வெள்ளிப் பதக்கம் மற்றும் லண்டன் 2012 இல் சுஷில் குமாருக்குப் பிறகு மல்யுத்தத்தில் இரண்டாவது வெள்ளிப் பதக்கம். இன்னும் எத்தனையோ சாதனையாளர்கள் உள்ளனர், சமீபத்திய நினைவுகளுடனும், லெஜண்டரி ஹாக்கி நினைவுகளுடனும் ஒலிம்பிக்சை இவர்கள் மூலம் நினைவில் கொள்வோம்