வருமான வரிச்சட்டத்தின் 10(17ஏ) பிரிவின்படி மத்திய நேரடி வரிகள் வாரியமானது (CBDT) , பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் அத்தகைய ரொக்கப் பரிசுகளுக்கு பொதுநலன் கருதி வரிவிலக்கு உண்டு என கூறியுள்ளது. 2014ம் ஆண்டு இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவின்படி ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போன்ற போட்டித்தொடர்களில் பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு என கூறியுள்ளது.
எனவே நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பதக்கம் வென்ற வீரர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப்பரிசுக்கு வரிவிலக்கு உண்டு, ஆனால் அதே நேரத்தில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நீரஜ் சோப்ராவுக்கு பரிசாள அளிக்கவுள்ள மஹிந்திரா 700 எக்ஸ்.யூ.வி காருக்கு வரிவிலக்கு கிடையாது. இந்தக் காருக்காக 30% வரியாக நீரஜ் சோப்ரா செலுத்தவேண்டியிருக்கும். அல்லது நல்லெண்ண அடிப்படையில் ஆனந்த் மகிந்திராவே இந்த தொகையை அவருக்காக செலுத்தலாம்.
இதே போல நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்கள் வழங்கவுள்ள ரொக்கப்பரிசுக்கு முழு வரிவிலக்கு கிடைக்கும். ஆனால் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு ஹரியானா அரசு அறிவித்த 50 லட்ச ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்காது. ஏனெனில் மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை. தோல்வி அடைந்தாலும் மகளிர் அணியினருக்கு நல்லெண்ண அடிப்படையில் ஹரியானா அரசு 50 லட்ச ரூபாயை 9 வீராங்கனைகளுக்கு பரிசாக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.