WWE மல்யுத்தப்போட்டியில் வையட் பேம்லி குழுவுடன் இணைந்து பல போட்டிகளில் பங்கேற்று வந்தார். பின்னர், அந்தக்குழுவில் இருந்து பிரிந்து தனியாக போட்டிகளில் பங்கேற்று வந்த லூக் ஹார்ப்பர் (Luke Harpar), கடந்த 2019-ஆம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், இரு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவருக்கு 41 வயதாகிறது. அவரின் திடீர் மறைவு மல்யுத்த உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி மல்யுத்த வீரர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலக மல்யுத்த போட்டிகளில் மிகச்சிறந்த என்டர்டெயினராக (Entertainer) வலம் வந்த ஷேட் காஸ்பர்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெனிஸ் கடற்கரையில் மே மாதம் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது இறப்பு குறித்து காஸ்பர்டின் பாதுகாவலர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பீச்சில் எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியால் ஷேட் காஸ்பர்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
WWE ஹால் ஆஃப் ஃபேமர் (Hall of famer ) மற்றும் முதல் இன்டர் கான்டினென்டல் சாம்பியன் உள்ளிட்ட பல பட்டங்களை பாட் பேட்டர்சன் வென்றுள்ளார். 79 வயதான அவர் அண்மையில் காலமானார். ராயல் ரம்பிள் உள்ளட்ட முதன்முறையாக நடத்தப்பட்ட பல்வேறு மல்யுத்த போட்டிகளில் பாட் பேட்டர்சன் சாம்பியனாக வாகைசூடியுள்ளார். தனது வாழ்கையின் பெரும்பகுதியை மல்யுத்த போட்டிகளிலேயே கழித்தார்.
WWE போட்டிகளில் கமலா என்ற அடையுமொழியுடன் விளையாடிய ஜேம்ஸ் ஹாரிஸ் 70 வயதில் காலமானார். 6 அடி உயரத்தில் அச்சுறுத்தும் முகத்துடன் மல்யுத்த களத்தில் களமிறங்கும் ஜேம்ஸ் ஹாரிஸ், ஹல்க் ஹோகன் (Hulk Hogen), அண்டர்டேக்கர் (Under Taker), மற்றும் ஆண்ட்ரே தி ஜெயண்ட் (Andre the Giant) உள்ளிட்ட பல மல்யுத்த ஜாம்பவான்களுடன் மோதியுள்ளார். 1980 -ன் முற்பகுதியில் ஆன்ரே தி ஜெயண்டுடன் மோதியது இவரின் வாழ்க்கையில் முக்கிய போட்டிகளாக இருந்தன.
WWE உலகில் புல்லட் பாப் ஆம்ஸ்ட்ராங் என்று அழைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் 1939ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பிறந்தார். தனது மல்யுத்த திறமையால் உலகப்புகழ்பெற்ற ஆம்ஸ்ட்ராங், இளமைப் பருவத்தில் மல்யுத்தத்தில் ஏராளமான பட்டங்களை வென்றுள்ளார். உலகின் தலைச்சிறந்த மல்யுத்த வீரர் என அழைக்கப்பட்ட அவர், தனது 80வது வயதில் ஆகஸ்ட் மாதம் காலமானார்.
WWE Hall of Famer மற்றும் மல்யுத்த போட்டிகளின் முக்கிய அறிவிப்பாளராக செயல்பட்டு வந்த ஹோவர்ட் ஃபிங்கல் கடந்த ஏப்ரல் மாதம் தனது 69 வயதில் காலமானார். அன்பாக ‘தி ஃபிங்க்’ என்று அழைக்கப்படும் ஃபிங்கெல், நியூஜெர்சியிலுள்ள நெவார்க்கைச் சேர்ந்தவர். மேலும் அவர் “விளையாட்டு-பொழுதுபோக்கு வரலாறு குறித்த பரந்த அறிவுக்கு” WWE அலுவலத்தில் பணியாற்றி வந்தார்.
மல்யுத்த நட்சத்திரமான கிராண்ட் ‘டேனி ஹாவோக்’ பெர்க்லாண்ட் ஜூன் 1ம் தேதியன்று தனது 45 வயதில் இறந்தார். அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரராக இருந்த அவர் கடந்த 12 ஆண்டுகளாக The Deathmatch Drunkard” என அழைக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு தனது கடைசி போட்டியில் விளையாடிய அவர், SHLAK என்ற வீரருக்கு எதிராக விளையாடினார்.