பேட்டிங்: ரவீந்திர ஜடேஜா தனது ஆக்ரோஷமான பேட்டிங்கால் சென்னை அணிக்கு பல சூப்பர் வெற்றிகளை பெற்று தந்துள்ளார். இதுதவிர ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சூழ்நிலைக்கு ஏற்ப கியர் மாற்றுவதில் துணிச்சலானவர். சர்வதேச டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 125. அதே நேரத்தில் ஐபிஎல்லில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 128 ஆகும்.
பந்துவீச்சு: ஜடேஜா தனது ஓவர்களை விரைவாக முடிக்கக்கூடிய ஒரு பந்து வீச்சாளர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 242 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 188 விக்கெட்டுகளையும், டி20யில் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதே நேரத்தில், 200 ஐபிஎல் போட்டிகளில் 127 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் ஜடேஜா. சூழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் இவர் ஆபத்தான ஒருவரும் கூட.
பீல்டிங்: யுவராஜ் சிங்கைப் போலவே ரவீந்திர ஜடேஜாவும் சிறந்த பீல்டர். ஜடேஜா எங்கு வேண்டுமானாலும் பீல்டிங் நிற்க கூடியவர். டி20 கிரிக்கெட்டில் 100 கேட்சுகளுக்கு மேல் எடுத்த சில கிரிக்கெட் வீரர்களில் ஜடேஜாவும் ஒருவர். ஜடேஜா 276 டி20 போட்டிகளில் 107 கேட்சுகளை எடுத்துள்ளார். மேலும், தற்போதைய தலைமுறையில் ஜடேஜா வசீகரமான ஃபீல்டர் என்பதில் சந்தேகமில்லை.
இதுவரை சிஎஸ்கே அணிக்கு மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா மட்டுமே கேப்டனாக இருந்துள்ளனர். இருவரும் இந்திய வீரர்கள். சென்னையில் மொயின் அலி, டுவைன் பிராவோ போன்ற மூத்த வீரர்களும் உள்ளனர். இருப்பினும் அந்த அணி இந்திய வீரரை நம்பியிருந்தது. ஜடேஜாவுக்கு 33 வயதுதான் ஆகிறது. மொயின் அலி- பிராவோவை விட இளையவர். இதுபோன்ற சூழ்நிலையில் ஜடேஜா அடுத்த சில ஆண்டுகளுக்கு கேப்டனாக எளிதாக இருக்க முடியும்.
இந்த காரணங்களால், ஜடேஜா முழு சீசனிலும் சிஎஸ்கே அணிக்கு வளையாடுவார். அதே போல் பிசிசிஐ ஒப்பந்தமும் உள்ளது. பிசிசிஐ ஒப்பந்தத்தின்படி இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் வேறு எந்த டி20 லீக்கிலும் விளையாட முடியாது. வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் நிறைய லீக்களில் விளையாடுகிறார்கள். ஜடேஜா இதுவரை ஐபிஎல்லில் ரூ.93 கோடி சம்பாதித்துள்ளார். இதுதவிர விளம்பரங்கள் மூலமாகவும், பிசிசிஐ ஒப்பந்தங்கள் மூலமாகவும் கோடிக்கணக்கான ரூபாய்களை (சுமார் ரூ.100 கோடி) ஈட்டி வருகிறார்.