முகப்பு » புகைப்பட செய்தி » சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

விராட் கோலி, ஜோஸ் பட்லர்க்கு பிறகு 851 ரன்கள் விளாசி ஒரு சீசனில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரரானார் ஷுப்மன் கில்.

  • 18

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    ஐபிஎல் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் அதிரடி சதம் விளாசி குஜராத் டைட்டன்ஸ் இறுதி போட்டிக்கு முன்னேற அடித்தளம் அமைத்து கொடுத்தார்.

    MORE
    GALLERIES

  • 28

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி, 60 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என 129 ரன்களை குவித்தார். இதன் மூலம் கில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 38

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    1. ஷுப்மன் கில் நேற்றைய போட்டியில் விளாசிய 129 ரன்கள், ஐபிஎல் ஃப்ளேஆஃப் சுற்றில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன்னர் 2014யில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் வீரேந்திர சேவாக் எடுத்த 122 என்ற ஸ்கோரே அதிகபட்சமான ஸ்கோராக இருந்தது.

    MORE
    GALLERIES

  • 48

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    2. ஐபிஎல் தொடரில் இந்திய பேட்ஸ்மேன் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக இந்த ஸ்கோர் அமைந்தது. கடந்த 2020யில், பெங்களுர் அணிக்கு எதிராக அன்றைய பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 132 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 58

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    3. ஷுப்மன் கில் நேற்று அடித்த 10 சிக்சர்கள் மூலம், ப்ளேஆஃப் சுற்றில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரரானார். விருத்திமான் சாஹா, கிரிஸ் கேல், வீரேந்திர சேவாக் ஆகியோர் ஒரே இன்னிங்சில் 8 சிக்சர்கள் அடித்ததே இதற்கு முன்னர் சாதனையாக இருந்தது.

    MORE
    GALLERIES

  • 68

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    4. ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து 138 ரன்கள் விளாசியது, ப்ளேஆஃப் போட்டியில் அமைத்த மூன்றாவது அதிக பாட்னர்ஷிப் ஸ்கோராக அமைந்தது.

    MORE
    GALLERIES

  • 78

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    5. நேற்றைய போட்டிவரை, ஷுப்மன் கில், இந்த சீசனில் 851 ரன்களை எடுத்துள்ளார். விராட் கோலி (2016-யில் 973 ரன்கள்), ஜாஸ் பட்லர் (2022யில் 863 ரன்கள்) ஆகியோருக்கு பிறகு ஒரு இன்னிங்சில் அதிக ஸ்கோர் எடுத்த வீரரானார் ஷுப்மன் கில்.

    MORE
    GALLERIES

  • 88

    சேவாக்கை விஞ்சிய ஷுப்மன் கில்.. நேற்றைய போட்டியில் முறியடித்த 6 சாதனைகள்..

    6. ஷுப்மன் கில்லின் அதிரடி பேட்டிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 233 ரன்களை எடுத்தது. ஐபிஎல் ப்ளேஆஃப்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும்.

    MORE
    GALLERIES