முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

மேகா ஆகாஷுக்காகவாவது போட்டியை ஜெயித்திருக்கலாமே என சிஎஸ்கே போட்டியில் மேகா ஆகாஷ் அதிர்ச்சியடைந்த படத்தை பகிர்ந்து பல ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

 • 110

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இது மகேந்திர சிங் தோனிக்கு சென்னை அணியின் கேப்டனாக 200ஆவது போட்டியாக அமைந்தது.

  MORE
  GALLERIES

 • 210

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  இந்த போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இறுதி பந்து வரை சென்ற இந்த போட்டியில் தோனி 32 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 310

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  இந்த போட்டியை 120 சிறுவர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டு களித்தனர்.

  MORE
  GALLERIES

 • 410

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  மேலும் இந்த போட்டிக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டபேரவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் டிக்கெட்டுகளை ஜெய்ஷாவிடம் கேளுங்கள் என அமைச்சர் உதயநிதி நகைச்சுவையாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த போட்டியை காண முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் வந்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 510

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  ‘பொன்னியின் செல்வன் குந்தவியுடன்.. குந்த வைத்து..’ என நடிகர் சதீஷ், த்ரிஷாவுடன் ஐபிஎல் போட்டியை பார்த்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 610

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பத்தி, தனது தோழிகளுடன் ஐபிஎல் போட்டியை கண்டு களித்தார். மேலும் இவர்களுடன் நடிகை த்ரிஷா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 710

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  நடிகை பிந்து மாதவி,  “ஸ்டேடியும்மில் பார்ப்பதற்கு ஒரு சிறந்த மேட்ச். ஆனால் கடைசி பந்தில் அந்த பவுண்டரி அடித்திருக்கலாம்” என தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டியை பார்த்த அனுபவத்தை தெரிவித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 810

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அமைச்சர் உதயநிதி மற்றும் நடிகர் சதீஷுடன் போட்டியை பார்த்தார்.

  MORE
  GALLERIES

 • 910

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  இவர்கள் மட்டுமின்றி மலையாள நடிகர் ஜெயராம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்து போட்டியை ரசித்தார்.

  MORE
  GALLERIES

 • 1010

  லோகேஷ் கனகராஜ் முதல் த்ரிஷா வரை... சிஎஸ்கே போட்டியை கண்டு களித்த பிரபலங்கள்..!

  மேலும் ‘மேகா ஆகாஷுக்காகவாவது போட்டியை ஜெயித்திருக்கலாமே’ என சிஎஸ்கே போட்டியில் மேகா ஆகாஷ் அதிர்ச்சியடைந்த படத்தை பகிர்ந்து பல ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். 

  MORE
  GALLERIES