ஐபிஎல் 2022 டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மகா அறுவையாகிப் போனது, குறிப்பாக பிரிதிவி ஷா அடித்து தூள் பறத்திய பிறகே வார்னர், ரோவ்மன் போவெல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆக, ரிஷப் பண்ட் அதிரடியை பிஷ்னோய், கிருஷ்ணப்பா கவுதம், குருணால் ஆகியோர் கட்டிப்போட டெல்லி அணி 7.3 ஓவர்களில் 67 என்ற வலுவான நிலையிலிருந்து வெறும் 149 ரன்களையே எடுக்க இலக்கை விரட்டிய லக்னோ அணி 19.4 ஓவர்களில் 155/4 என்று வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - பிரித்வி ஷா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார்.
கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு விரட்டிய பாண்டியா அணியின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்ய இறுதி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதி ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர் முதல் பந்திலே தீபக் ஹூடாவை வெளியேற்றினார். பின்னர் களமிறங்கிய இளம் வீரர் ஆயுஷ் படோனி ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அதற்கு அடுத்த பந்தை சிக்சருக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.