ரூ .499 பிளானின் கீழ், ஜியோ தனது பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ஐபிஎல் முழு சீசனையும் நீங்கள் பார்க்கலாம். எனினும், இந்தத் திட்டம் பயனர்களுக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் ஆப்ஷன்கள் தரவில்லை. இந்த புதிய பிளான் ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட ரூ .399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் அளிக்கப்படுகிறது.
ரூ 777 பிளானின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டாவுடன் தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது ஜியோ. இந்த பிளான் அன்லிமிட்டட் ஜியோ டூ ஜியோ அழைப்பு, பிற நெட்வொர்க்குகளை அழைக்க 3,000 FUP நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. 84 நாட்கள் இது செல்லுபடியாகும். ரூ 499 பிளானைப் போலவே, இது ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வருகிறது.