ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வழக்கம் போலவே இந்த ஆண்டும் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கணிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு அணியும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த தொடரில் விளையாடியுள்ளன. பாதிக்கும் அதிகமான ஆட்டங்களின் முடிவு கடைசி ஓவரில்தான் தெரியும் அளவுக்கு இந்த ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெறுகிறது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றம் அளித்து வரும் 5 கிரிக்கெட் வீரர்களை பார்க்கலாம்…
[caption id="attachment_951104" align="alignnone" width="600"] மயங்க் அகர்வால் : கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். ரூ. 8.25 கோடிக்கு வாங்கப்பட்ட மயங்க் அகர்வால் 4 போட்டிகளில் 65 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 103 என மோசமாக உள்ளது.