ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளுக்கு நாள் போட்டிகளில் சுவாரஸ்யம் கூடி வருகிறது. நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆர்.சி.பியின் வெற்றி சில அணிகளின் ப்ளே கனவுகளை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இரண்டு அணிகள் ஒரே புள்ளிகளைப் பெற்றிருந்தால் நெட் ரன் ரேட் கொண்டு அவர்களின் நிலைகளை தீர்மானிக்கப்படுகிறது. 16 மற்றும் 18 புள்ளிகள் பெற்றால் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ( 13 போட்டிகள், 15 புள்ளிகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் டெல்லிக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியை தோனி தலைமையிலான சிஎஸ்கே வெற்றிப்பெற்றால் அந்த அணிக்கும் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும். 17 புள்ளிகள் பெற்று பிளே ஆப்-க்கு சென்றுவிடும். மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அதேவேளையில் டெல்லி தோற்றால் சீனே மாறிவிடும். லக்னோ அணிக்கு 2வது இடத்துக்கு சென்றுவிடும்.சென்னை அணி மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, நெட் ரன் ரேட் என ஏகப்பட்ட விஷயங்களை நம்பி காத்து இருக்க வேண்டும். சிஎஸ்கே தோல்வி ஆர்.சி.பி-க்கு நம்பிக்கை கொடுக்கும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ( 13 போட்டிகள், 15 புள்ளிகள்)
மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றியை ருசித்தும் லக்னோ அணியின் ப்ளே ஆப் ஸ்பாட் உறுதியாகவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும். அப்போது தான் அந்த அணிக்கு 17 புள்ளிகள் கிடைக்கும். சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் தோற்றால் லக்னோ இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடும். ஒருவேளை சிஎஸ்கே வெற்றி பெற்றால் லக்னோ 3-வது இடத்தில் மாற்றம் இல்லாமல் இருக்கும். கொல்கத்தாவுக்கு எதிராக தோற்றால் மும்பை, ஆர்.சி.பி சர்ப்ரைஸ் கொடுக்கலாம். மும்பை, ஆர்.சி.பி அணிகள் அடுத்தப்போட்டியில் தோற்றால் மட்டுமே லக்னோவின் ப்ளே ஆப் கனவு நடக்கும். இல்லையென்றால் லக்னோவுக்கு பை பை தான்.
மும்பை இந்தியன்ஸ் ( 13 போட்டிகள், 14 புள்ளிகள்)
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றிப்பெற்றால் மட்டுமே பிளே ஆப் பற்றி நினைத்துப்பார்க்க முடியும். மும்பை வெற்றிப்பெறும் பட்சத்தில் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் செல்லும். ஒருவேளை ஆர்.சி.பி தனது கடைசி லீக் போட்டியில் வெற்றிப்பெற்றால் இரண்டு அணிகளும் 16 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். நெட் ரன் ரேட்டின் அடிப்படையில் முடிவுகள் இருக்கும். சிஎஸ்கே, லக்னோ அணிகள் கடைசி லீக் போட்டியில் தோற்றால் மும்பைக்கு வாய்ப்பு பிரகாசமாகும். மும்பை அணியை பொறுத்தவரையில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, ரன் ரேட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ( 13 போட்டிகள், 14 புள்ளிகள்)
ஆர்.சி.பி தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியை கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும். அவ்வாறு நடந்தால் மும்பை அணி வெற்றிப்பெற்றால் கூட ஆர்.சி.பியின் பிளே ஆப் கனவை கலைக்க முடியாது. சிஎஸ்கே, லக்னோ அணிகள் தோற்றால் ஆர்.சி.பி டாப் 2-வது இடத்துக்கு சென்றுவிடும். ஒருவேளை ஆர்.சி.பி தோற்றால் 14 புள்ளிகளுடன் இருக்கும். மும்பை அணி கடைசி லீக்கில் வெற்றிப்பெற்றால் பிளே ஆப் சென்றுவிடும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ( 13 போட்டிகள், 12 புள்ளிகள்)
ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை இன்று வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். அடுத்தடுத்த லீக் போட்டியில் மும்பை, ஆர்.சி.பி அணிகள் தோல்வியடைந்தால் ராஜஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆர்.சி.பியை விட நல்ல ரன் ரேட் இருந்தால் பிளே ஆப் நினைத்து பார்க்கலாம்.