நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் - சென்னை அணிகள், முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதின. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட சென்னை அணியில், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக 60 ரன்கள் விளாசி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.