ஒரு காலத்தில் தோனி ஆடினாலும் ஆடாவிட்டாலும், தப்பும் தவறுமாக கேப்டன்சி செய்தாலும், சரியாகச் செய்தாலும் அதையெல்லாம் ஏதோ கிரிக்கெட்டே கண்டறியாத அரும்பெரும் காரியமாக ஊடகங்கள் விதந்தோத ரசிகர்களும் அதையே பின்பற்ற தோனிதான் இந்திய கிரிக்கெட் அல்ல, கிரிக்கெட்டின் முகமே என்பது போல் பில்ட் அப் கொடுக்கப்பட்டது, ஆனால் இன்று தோனியை எம்.எஸ்.டி. என்ற காலமும் போச்சே, தினேஷ் கார்த்திக்கை மைதானங்களில் டிகே டிகே என்ற கத்தி உற்சாகப்படும் காலமும் வந்ததே என்று ரசிகர்களின் கவன ஈர்ப்பு மாறி விட்டது.
ஐபிஎல் 2022-ல் 6 போட்டிகளில் 197 ரன்கள் விளாசியுள்ள தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 209.57 என்று டாப் ஸ்ட்ரைக் ரேட்டில் உள்ளார். தோனி என்றைக்குமே இம்ப்ரூவைஸ் செய்ய மாட்டார், தன்னை புதுப்பித்துக் கொள்ள மாட்டார், இதில் அவர் கன்சர்வேட்டிவ், தோனியிடம் உள்ள ஷாட்களின் எண்ணிக்கையும் கார்த்திக்கிடம் உள்ள ஷாட்களின் எண்ணிக்கையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகும்.
வான்கடே மைதானத்தில் 'டிகே, டிகே' கோஷங்கள் சத்தமாக ஒலிக்க, கார்த்திக் சில அபாரமான ஷாட்களை ஆடி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் ஓவரில் 28 ரன்கள் எடுத்து ஆர்சிபிக்கு ஆதரவாக வேகத்தை ஸ்விங் செய்தார், தற்போது ஐபிஎல்லில் தான் சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்தார். கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது திராவிட் கேப்டன்சியில் ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, அதில் கார்த்திக்கும் ஒருவர், இன்று வரை இவர் ஒருவர்தான் ஆடி வருகிறார்.
இது ஒரு சிறப்பு இரவு என்றும் அது ஒரு சிறப்பு நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்றும் வலியுறுத்தி விராட் கோலி ஐபிஎல் இணையதளத்தில் கூறியதாவது: "நான் இதை அதிகம் செய்யவில்லை. ஆனால் இதோ, இன்று அதைச் செய்ய ஒரு சிறப்பு இரவு. நான் இங்கே இருக்கிறேன். இதுவரை என்னைப் பொறுத்தவரை இந்த தருணத்தின் நாயகன், 'மேன் ஆஃப் தி ஐபிஎல்' என்று தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளியுள்ளார் விராட் கோலி.
விராட் கோலி கார்த்திக்கின் தயாரிப்பு எப்படி என்று கேள்வி எழுப்ப, தினேஷ், “ஒரு சிறிய கால இலக்கு உள்ளது மற்றும் ஒரு பெரிய தொலைநோக்கும் உள்ளது. RCB க்கு வெளிப்படையாக சிறப்பாக செயல்படுவதே சிறிய கால இலக்கு. நான் RCB பின் அறை ஊழியர்களுக்கு நன்றி என்று நினைக்கிறேன். நான் தேர்வு செய்யப்பட்ட நாள் சஞ்சய் பாங்கர் என்னை அழைத்தார். மேலும், 'டிகே நீ ஃபினிஷர் ரோலில் ஆடுகிறாய்' என்றார். நாங்கள் டிவில்லியர்ஸை இழந்துவிட்டோம், அவருக்குப் பதிலாக அவரின் திறமையில் பாதி உள்ளவர்களைக் கூட எங்களால் அடையாளம் காண முடியவில்லை, உன்னால் ,உடியும் அந்த பாத்திரத்தை செய்ய எங்களுக்கு 2-3 வீரர்கள் தேவை'. அப்புறம் 'சரி, இதைத்தான் செய்யணும்' என்று எண்ணிக்கொண்டேன்," என்றார் கார்த்திக்.
மேலும் விராட் கோலி கூறும்போது, “நீங்கள் AB டிவில்லியர்ஸ் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள், மேலும் AB பிரிட்டோரியாவில் வீட்டில் அமர்ந்து நீங்கள் எங்களுக்காக வெற்றியுடன் முடித்து அணியை கொண்டு செல்வதை பார்த்து மிகவும் பெருமைப்படுவார் என்று நான் நினைக்கிறேன்," என்று கோலி மேலும் கூறினார்.
அபாரத் திறமைகளை லாபிக்கள் நீண்ட காலம் அடக்கி வைக்க முடியாது என்பதற்கு தினேஷ் கார்த்திக் ஓர் உதாரணம்.