சின்னப் பசங்க எல்லாம் தாண்டிப் போயிட்டாங்களே- கோலியை விட அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
ஐபிஎல் தொடரில் சாதித்தவரும் விராட் கோலிதான், நிலைதடுமாறி வீணாகப் போனவரும் அவர்தான். ஐபிஎல் 2022 தொடரில் 9 போட்டிகளில் வெறும் 128 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் வயதில் சிறிய பல இளம் வீரர்கள் கோலியைத் தாண்டி அதிக ரன்களை எடுத்துள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம்:
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அபிஷேக் சர்மா இவர் 8 ஆட்டங்களில் 285 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பிப் பட்டியலில் 6ம் இடத்தில் இருக்கிறார், டுபிளெசிஸே இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறார். அபிஷேக் 2 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
2/ 11
2வதாக இன்னொரு இளம் வீரர் திலக் வர்மா, இவர் 8 போட்டிகளில் 272 ரன்கள் எடுத்து 8ம் இடத்தில் இருக்கிறார், இவருக்குக் கீழ்தான் டேவிட் வாரன்ரே இருக்கிறார். திலக் வர்மா 2 அரைசதம் எடுத்துள்ளார்.
3/ 11
3வதாக பிரிதிவி ஷா 8 போட்டிகளில் 254 ரன்கள். இவர் 11ம் இடத்தில் இருக்கிறார்.
4/ 11
4வதாக ஷிவம் துபே இவர் 8 போட்டிகளில் 247 ரன்கள் எடுத்துள்ளார்.
5/ 11
5வதாக ஷுப்மன் கில் இவர் 8 போட்டிகளில் 229 ரன்கள் எடுத்துள்ளார்.
6/ 11
6வதாக சன் ரைசர்ஸின் ராகுல் திரிபாதி இவர் 8 போட்டிகளில் 228 ரன்கள் எடுத்துள்ளார்.
7/ 11
7வதாக சஞ்சு சாம்சன் இவரும் 8 போட்டிகளில் 228 ரன்களை எடுத்துள்ளார்.
8/ 11
8வதாக தேவ்தத் படிக்கல் இவர் 8 போட்டிகளில் 199 ரன்கள் எடுத்துள்ளார்.
9/ 11
9வதாக இசான் கிஷன் இவர் 8 போட்டிகளில் 199 ரன்கள் எடுத்துள்ளார்.
10/ 11
10வதாக ஷாபாஸ் அகமட் இவர் 9 போட்டிகளில் 195 ரன்கள் எடுத்துள்ளார்.
11/ 11
11வதாக ராகுல் திவேத்தியா 136 ரன்களையும் இளம் சென்சேஷன் ஆயுஷ் பதோனி 134 ரன்களையும் லலித் யாதவ் 134 ரன்களையும் எடுக்க ஏன் எம்.எஸ்.தோனியே கோலியை விட அதிகமாக ரன்கள் எடுத்து இதுவரை 132 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 128 ரன்களுடன் 41வது இடத்தில் இருக்கிறார்.