ஐபிஎல் 2022 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சன் ரைசர்ஸுக்கும் நடந்த போட்டியில் லக்னோவின்தீபக் ஹூடா, கே.எல். ராகுல் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஐபிஎல் 2022 இல் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளின் அதிர்ஷ்டம் தொடர்ந்தது.
பின்னர், சன்ரைசர்ஸ் அணிக்கு 18 பந்துகளில் இருந்து 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பூரன் ஆவேஷின் பந்து வீச்சை சிக்ஸருக்கு அடித்தார் இது டாப் எட்ஜ். ஆனால் இந்த அதிர்ஷ்டம் இரண்டு பந்துகளுக்குப் பிறகு மாறியது, பூரன் ஒரு ஃபுல்-டாஸை நேராக லாங்-ஆஃப் கைகளில் அடித்தார். பிறகு ஆவேஷ் அதிரடி வீரர் அப்துல் சமது விக்கெட்டையும் வீழ்த்தினார்.
19வது ஓவரை ஆண்ட்ரூ டை சிறப்பாக வீசினார் ஆனால் ஒரு யார்க்கர் புல்டாஸாக மாற ஷெப்பர்ட் அதை சிக்ஸ் விளாச, கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. வாஷிங்டன் சுந்தர் சிக்ஸ் அடிக்கப்போய் லாங் ஆனில் கேட்ச் கொடுத்தார், பழைய விதியாக இருந்தால் ஷெப்பர்ட் கிராஸ் செய்திருப்பார், இப்போது முடியாது, புதிய பேட்டர்தான் ஆட வேண்டும். புவனேஷ்வர்தான் ஆட வேண்டும். இரண்டு சிங்கிள்களுக்குப் பிறகு புவனேஷ்வர் தூக்கிக் கையில் கொடுத்தார், வெற்றி பெறும் நிலையிலிருந்து தோற்பது எப்படி என்பதை சன் ரைசர்ஸ் அணியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.