உமேஷ் யாதவ், அங்குல் ராய், சுனில் நரைன் ஆகியோரின் 12 ஓவர்களில் 71 ரன்கள் மட்டுமே வந்தது 2 விக்கெட்டுகளை இவர்கள் கைப்பற்றினர். இந்த மூவரின் 12 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்திருந்தால் இன்னொரு 30 ரன்கள் ராஜஸ்தானுக்குச் சேர்ந்திருக்கும் கொல்கத்தா தோற்றிருக்கும் ஏனெனில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளையே இழந்தாலும் 5 பந்துகளையே மீதம் வைத்து வெற்றி பெற்றது.
கொல்கத்தா விரட்டலில் பாபா இந்திரஜித் 15, ஏரோன் பிஞ்ச் 4 சொதப்ப 32/2 என்ற நிலையில் ஷ்ரேயஸ் அய்யர் மெதுவாகத்தான் ஆடினார் 32 பந்துகளில் 34 ரன்களைத்தான் சேர்த்தார், இவரும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கென்றே பிறந்த வீரரான நிதிஷ் ரானாவும் இணைந்து ஸ்கோரை அடுத்த 7.1 ஓவர்களில் 93 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், அப்போது ஸ்ரேயஸ் அய்யர் போல்ட் பந்தில் சாம்சனிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் பந்து கிளவ்வில் பட்டது ரீப்ளேயில் தெரிந்தது. புல் ஷாட் ஆடப்போய் அவுட் ஆனார்.