ஐபிஎல் 2021: அதிக பவுண்டரிகள்: இளம் சாதனையாளர் ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்ச் கேப்பை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்து சுனில் நரைன் ஆட்டமிழந்தார். ருதுராஜ் 25 ரன்கள் எடுத்த போது நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
24 வயது 257 நாட்களில் ஐபிஎல் 2021 தொடரில் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் என்ற சாதனையாளரானார் ருதுராஜ் கெய்க்வாட்.
2/ 7
இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.
3/ 7
கே.எல்.ராகுல் 13 போட்டிகளில் 626 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இதனை டூ பிளெசிஸ் முறியடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பை 2 ரன்களில் அவர் தவறவிட்டார்.
4/ 7
ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் சீரான முறையில் ரன் எடுப்பவர். சராசரி 45.35 ஸ்ட்ரைக் ரேட் 136.
5/ 7
64 பவுண்டரிகளை அடித்த ருதுராஜ் அதிக பவுண்டரிகளை ஐபிஎல் 2021 தொடரில் அடித்தவரானார்.
6/ 7
மொத்தம் 23 சிக்சர்கள் விளாசியுள்ளார் இந்தத் தொடரில் ருதுராஜ், கேஎல்.ராகுல் 30க்குப் பிறகு 2ம் இடம் ருதுராஜுக்கே.
7/ 7
மறக்க முடியாத இந்த ஐபிஎல்2021 சீசனில் 4 அரைசதம் ஒரு சதம் விளாசினார் ருதுராஜ் கெய்க்வாட்