2013-ல் 5 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ சாம்பியன் ஆக்கினார் ரோகித் சர்மா அதே ஆண்டில் சாம்பியன்ஸ் லீக் டி20-யிலும் தன் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்றார் ரோகித் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையில் 2015ம் ஆண்டு மும்பை இண்டியன்ஸ் மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது. 2017-ல் 3வது முறையாக ஐபிஎல் சாம்பியன்களான ஒரே அணியானது மும்பை இந்தியன்ஸ் இதுவும் ரோகித் சர்மா கேப்டன்சியில்தான் 2019 ஐபிஎல் கோப்பையில் சிஎஸ்கேவை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் ஆனது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸில் 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றார் ரோகித் சர்மா,. இந்திய டி20 அணி கேப்டனாக நிதாகஸ் டிராபியில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி ரோகித் கேப்டன் 2018-ல் யுஏயில் ஆசியக் கோப்பையில் மீண்டும் வங்கதேசத்தை விழ்த்தி ரோகித் தலைமையில் ஆசிய சாம்பியன்களானது 2017-ல் இருதரப்பு தொடரில் இலங்கைக்கு எதிராக கேப்டனாக தொடரை வென்றார் ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக 10 ஒருநாள் போட்டிகளில் கேப்டன்சி செய்த ரோகித் சர்மா 8-ல் வென்றுள்ளார், 19 டி20 போட்டிகளில் 15-ல் இந்தியா இவர்து தலைமயில் வென்றுள்ளது.