ஐ.பி.எல் தொடர் ஆரம்பம் முதல் தற்போது வரை ஒரு அணிக்கு ஒருவரே கேப்டனாக நீடித்து வருவது சி.எஸ்.கே கேப்டன் தோனி மட்டும் தான். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 20 பந்துகளில் 51 ரன்கள் விளாசல்.. 2012 எலிமினேஷன் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 51 ரன்களை தெறிக்கவிட்டார். கொல்கத்தா அணிக்கு எதிராக 33 பந்துகளில் 66 ரன்கள் மற்றும் பெங்களூரு அணிக்கு எதிராக 34 பந்துகளில் 70 ரன்கள் விளாசல் 2018-ல் பெங்களூரு அணிக்கு எதிராக 34 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார். அம்பதி ராயுடு உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 56 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தனர். 2013-ம் ஆண்டு பெங்களூரு உடனான போட்டியில் 3 கேட்ச் மற்றும் 1 ஸ்டெம்பிட் செய்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். தோனி தலைமையில் சி.எஸ்.கே அணி 2010, 2011 மற்றும் 2018 ஐ.பி.எல் கோப்பை வென்று சாதனை படைத்தது. ஐ.பி.எல் வரலாற்றில் கடந்த சீசனை தவிர மற்ற எல்லா சீசனிலும் தோனி தலைமையிலான சி.எஸ்.கே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஓபனிங்கில் ராயுடு, பவர் ப்ளேவில் தீபக் சாஹர் என பல முக்கிய மாற்றங்களை 2018 ஐபிஎல் இறுதிப்போட்டியில் செய்து கோப்பையை தோனி வென்றார்.