ஐபிஎல் 2022 தொடரில் சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
2/ 15
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதின.
3/ 15
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் - டூ பிளெசிஸ் கூட்டணி இந்த முறையும் சிஎஸ்கேவிற்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
4/ 15
கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ருத்துராஜை 32 ரன்களில் அவுட்டாக்கி இவர்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.
5/ 15
சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்த தொடக்க வீரர் டூ பிளெசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார்.
6/ 15
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த ராபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ரன்கள் அடித்து மிரட்டினார்.
7/ 15
மொயின் அலி - டூ பிளெசிஸ் ஜோடி 68 ரன்கள் குவித்தது. இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை 20 ஒவர்கள் முடிவில் 192 ரன்கள் சேர்த்தது. மொயின் அலி 37 ரன்களும் டூ பிளெசிஸ் 86 ரன்களுனம் எடுத்தனர்.
8/ 15
193 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் அரைசதம் அடித்தனர்.
9/ 15
வெங்கடேஷ் ஐயர் 50 ரன்கள் எடுத்திருந்த போது சர்துல் தாகூர் பந்துவீச்சில் ஜடோஜவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
10/ 15
பவுண்டரி எல்லையில் அட்டகாசமான கேட்ச் பிடித்த ஆல் ரவுண்டர் ஜடேஜா.
11/ 15
சிஎஸ்கே பந்துவீச்சை சாமளிக்க முடியாமல் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.
12/ 15
கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர்.
13/ 15
இறுதியாக சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை 4-வது முறையாக வென்றது.
14/ 15
சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்.
15/ 15
சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்ற வெற்றி கொண்டாட்டம்
115
IPL 2021 Final | தோனி தலைமையில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே - புகைப்படங்கள்