கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார். ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சை துவம்சம் செய்த கெய்ல் 29 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் மந்தீப் சிங் அரைசதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெற்றி பெற்ற பஞ்சாப் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.