முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

IPL 2020 Final: துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு ஐ.பி.எல். தொடரின் இறுதி யுத்தம் நடைபெற உள்ளது. இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் அடி எடுத்து வைத்துள்ள டெல்லி கேப்பிடல்சை எதிர்கொள்கிறது.

  • 112

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    கடந்த 2019ம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதி போட்டியில் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    MORE
    GALLERIES

  • 212

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2018 ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே தனது வெற்றியை 3வது முறையாக பதித்தது. 2 வருட தடைக்கு பின் திரும்பிய சி.எஸ்.கே இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    MORE
    GALLERIES

  • 312

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    ஐபிஎல் 2017 சீசனில் மும்பை இந்தியன்ஸ், புனே அணியை கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    MORE
    GALLERIES

  • 412

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2016-ம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் முதல் முறையாக எஸ்.ஆர்.எச் அணி கோப்பையை வென்றது. 208 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்.சி.பி 200 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    MORE
    GALLERIES

  • 512

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2015 ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே-வை வீழ்த்தி மும்பை 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    MORE
    GALLERIES

  • 612

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2014 சீசனில் முதன்முறையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் அணியை கொல்கத்தா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    MORE
    GALLERIES

  • 712

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல் கோப்பையை முதன்முறையாக வென்றது 2013. மும்பை இறுதிபோட்டியில் 148 ரன்கள் அடித்தது. சி.எஸ்.கே 125 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை சந்தித்தது.

    MORE
    GALLERIES

  • 812

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2012ம் ஆண்டு நடப்பு சாம்பியன் அணியாக இருந்த சென்னையை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்ட கே.கே.ஆர் அணி முதல் முறையாக ஐ.பி.எல் பட்டத்தை வென்றது.

    MORE
    GALLERIES

  • 912

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2011 தொடரில் சி.எஸ்.கே அணி தனது இரண்டாவது வெற்றியை கண்டது. ஆர்.சி.பி.க்கு எதிரான ஆட்டத்தில் முரளி விஜய் மற்றும் மைக் ஹஸ்ஸியின் அரைசதங்கள் மூலம் சிஎஸ்கே அணி 205-5 என்ற கணக்கில் ரன்களை குவித்தது. 206 என்ற இலக்கை எதிர்கொண்ட ஆர்.சி.பி. அணி 20 ஓவர்களில் 147-8 ரன்களை மட்டுமே எடுத்தது.

    MORE
    GALLERIES

  • 1012

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்கொண்ட மும்பை அணி 146-9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    MORE
    GALLERIES

  • 1112

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2009 ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் முன்பிருந்த டெக்கான் சார்ஜர்ஸ் தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பியை வீழ்த்தியது.

    MORE
    GALLERIES

  • 1212

    ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற அணிகள் யார்? யாருடன்?

    2008ம் ஆண்டு முதன்முறையாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதித்தது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற பட்சத்தில் அதனை எடுத்து ஆர்.ஆர் அணி வெற்றிக்கோப்பையை தட்டியது.

    MORE
    GALLERIES