ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் யார் ? யார் யாருக்கு என்னென்ன விருது?
ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டதன் முக்கிய நோக்கமே நாட்டின் மூலை முடுக்கில் உள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பதுதான். அப்படி அறிமுகமாகும் வீரர்களில் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவருக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்படுவது வாடிக்கை.


அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வளர்ந்துவரும் வீரர் விருது பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கலுக்கு வழங்கப்பட்டது. 14 போட்டிகளில் விளையாடிய இவர் 5 அரைசதங்கள் உட்பட 473 ரன்கள் விளாசினார்.


தொடர் முழுவதும் அறத்தை பின்பற்றிய அணிக்காக வழங்கப்படும் விருதை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது. களத்தில் எதிரணியை மரியாதையுடன் நடத்துவது, நடுவரின் முடிவுக்கு தலை வணங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்பட்டது.


போட்டியின் முடிவை மாற்றும் அளவிற்கு சிறப்பாக விளையாடிய வீரருக்கான Game changer விருது கே.எல்.ராகுல் வசமானது.


அதிக Strike rate கொண்ட வீரருக்கான விருதை மும்பை அணியின் பொல்லார்டு தட்டிச் சென்றார். இவருக்கு ஆல்ட்ராஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது.


இந்த தொடரில் 30 சிக்சர்கள் விளாசிய மும்பை அணியின் இஷான் கிஷனுக்கு அதிக சிக்சர்கள் விளாசிய வீரருக்கான விருது வழங்கப்பட்டது.


தொடர் முழுவதும் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான விருதை, மும்பை அணியின் Trend Boult பெற்றார்.


இந்த தொடரில் 30 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடாவிடம் பர்ப்பிள் கேப் சென்றது.. 14 போட்டிகளில் 670 ரன்கள் விளாசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஆரஞ்ச் கேப்பை தட்டிச் சென்றார்.


தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மதிப்புமிக்க வீரருக்கான விருது ராஜஸ்தானின் ஜோப்ரா ஆர்ச்சருக்கு வழங்கப்பட்டது.