ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அணி வெற்றி பெற்றதும், நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையால் சேப்பாக்கம் பகுதியே ஜொலித்தது. அத்துடன், ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் மைதானமே அதிர்ந்தது.