முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

உலகக்கோப்பை டி20 தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார், பணிச்சுமை காரணமாகவும் பேட்டிங் பார்ம் காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் கேப்டனாக விராட் கோலியின் சாதனகள் சிலவற்றைத் தொகுத்துக் கொள்வோம்

  • 110

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    உலகக்கோப்பை டி20 தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார், பணிச்சுமை காரணமாகவும் பேட்டிங் பார்ம் காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் கேப்டனாக விராட் கோலியின் சாதனகள் சிலவற்றைத் தொகுத்துக் கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 210

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    2007 உலகக்கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது, அதன் பிறகு தோனி தலைமையில் இந்திய அணி 72 டி20 போட்டிகளில் 41-ல் வென்றுள்ளது, இது 56% வெற்றி விகிதமாகும். கோலி கேப்டன்சியில் 45 போட்டிகளில் 27-ல் வென்றிருக்கிறோம் இது 60% ஆகும்.

    MORE
    GALLERIES

  • 310

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    டி20 சர்வதேச போட்டி பேட்டிங்கில் தோனி 98 மேட்ச்களில் 1617 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், அதில் அதிசயமாக 2 அரைசதங்கள் மட்டுமே, மாறாக விராட் கோலி 90 டி20 போட்டிகளில் 3159 ரன்கள் 28 அரைசதங்கள்.

    MORE
    GALLERIES

  • 410

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    மொத்தமாக டி20-யில் எடுத்துப் பார்த்தால் தோனி 338 போட்டிகளில் 6,858 ரன்களையே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 134.89. 27 அரைசதம். கோலி 311 போட்டியில் 9,929 ரன்களை எட்டியுள்ளார், இந்த ஐபிஎல் தொடரில் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டுவார்.

    MORE
    GALLERIES

  • 510

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    டி20 கிரிக்கெட்டில் தோனி சதம் எடுக்க வாய்ப்பில்லை மாறாக கோலி 5 சதங்கள் 72 அரைசதங்களுடன் மொத்தமாக 41.71 என்று சராசரி வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 610

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    கோலியின் கேப்டன்சியில் இன்னும் ஐசிசி டிராபி வெல்லவில்லை ஆனால் இருதரப்பு தொடர்களில் தெ.ஆ, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸில் 2017-ல் தொடர்களை வென்று அசத்திக் காட்டியுள்ளார் கோலி.

    MORE
    GALLERIES

  • 710

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    2019-20- நியூசிலாந்துக்கு 5-0 என்று கோலி கேப்டன்சியில் இந்திய அணி கொடுத்த உதை மறக்க முடியாதது.

    MORE
    GALLERIES

  • 810

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    2020-ல் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் கோலி கேப்டன்சியில் டி20 தொடரை 2-1 என்று வென்றுள்ளோம்.

    MORE
    GALLERIES

  • 910

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கோலி படை 3-2 என்று வென்றது கோலி தொடர் நாயகனாக பிரகாசித்தார்.

    MORE
    GALLERIES

  • 1010

    டி20 கேப்டன்சி, பேட்டிங்கில் தோனியை விஞ்சிய கோலி

    கோலியும் தோனியும் இந்திய கிரிக்கெட்டின் 2 கண்களாகச் செயல்பட்டாலும் தோனியைக் காட்டிலும் களவியூகம், ஆக்ரோஷம் ஆகியவற்றில் கோலி கொஞ்சம் விஞ்சி நிற்கிறார். ஆனால் அணித்தேர்வில் தோனிதான் கில்லாடி.

    MORE
    GALLERIES