இந்த IPL 2023 -இல் தன் அற்புதமான விக்கெட்கீப்பிங் மூலம் ஹூக்ளியில் உள்ள சந்தன்நகரைச் சேர்ந்த அபிஷேக் போரெல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். இவர் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆடிக் கொண்டு இருக்கிறார். கடந்த 11.04.2023 அன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைப்பெற்ற போட்டியில், காற்றில் பறந்து அபிஷேக் போரெல் பந்தைப் பாய்ந்து பிடித்து மும்பை அணியின் மிகப் பெரிய விக்கெட்டான ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தக் காரணமாக அமைந்தார்.
இது அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு இவருக்கு பாராட்டுக்களும் குவிந்தது. இவரை சந்தன்நகரின் ஸ்பைடர் மேன் என்று பலரும் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். 20 வயதான இந்த வங்காள இளைஞரின் வெற்றி அவர் குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அகர்தலாவுக்கு மாறிய பிறகு, உள்நாட்டு கிரிக்கெட்டில் வங்காள அணிக்காக விருத்திமான் சாஹாவின் வாரிசாக போரெல் விளையாடத் தொடங்கினார்.
வங்காளத்தின் இந்த இளம் கிரிக்கெட் வீரர் கடந்த 11.04.2023 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தன்னுடைய அசத்தலான விக்கட் கீப்பிங் திறன் மூலம் அபாரமாக விளையாடி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ரோஹித் ஷர்மா அடித்த பந்தை காற்றில் பறந்து பாய்ந்து பிடித்த அபிஷேக் போரெல் இந்த IPL சீசன் தொடரில் தடுமாறிக் கொண்டு இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கண்டிப்பாக பக்க பலமாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இளம் விக்கெட் கீப்பரான இவர் தனது பெற்றோருடன் ஹூக்ளியின் சந்தன்நகரில் ( Chandannagar) உள்ள சர்க்கஸ் மைதானத்திற்கு அருகில் வசித்து வருகிறார். கனைலால் வித்யாமந்திர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் நான்கு வயதிலிருந்தே விக்கெட் கீப்பிங் கையுறைகளை அணிந்து கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். விக்கெட் கீப்பிங்கைத் தவிர இவருக்கு சிறந்த பேட்டிங் திறமையும் உள்ளது