மகேந்திர சிங் தோனியின் ரசிகர் ஒருவர் அவரது வீட்டிற்கு தோனி ரசிகரின் இல்லம் (Home of Dhoni Fan) என்று பெயர் வைத்துள்ளார். தமிழக ரசிகர்கள் தோனியை செல்லமாக தல என்று அழைக்க ஆரம்பத்தினர். இதனிடையே கடலூர் மாவட்டம் அரங்குர் பகுதியை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தனது வீட்டிற்கு தோனி ரசிகரின் இல்லம் என்று பெயரிட்டுள்ளார். தனது வீடு முழுவதும் சி.எஸ்.கே அணி சீருடை நிறமான மஞ்சள் நிறம் மற்றும் தோனியின் உருவத்தையும் வரைந்துள்ளார். கோபி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தோனியின் தீவிர ரசிகர் என்பதால் இதுப்போன்று செய்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தோனி ரசிகர்கள் பலர் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். (Image: Twitter) (Image: Twitter)