சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி Qualifier 2-க்கு தகுதிப்பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் மத்வால். இவர் 5 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் அணில் கும்பளேவின் சாதனையும் சமன் செய்து மிரளவைத்துள்ளார்.
இந்த சீசனில்தான் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார். பின்பு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட், குஜராத் அணிக்கு எதிராக 3 விக்கெட், ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.நேற்று லக்னோ அணிக்கு எதிராக 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. மேலும் அணில் கும்பலேவின் சாதனையை சமன் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.மேலும் ஆர்சரும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலே வெளியேறிய நிலையில் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. தற்போது ஆகாஷ் மத்வாலின் இந்த பந்துவீச்சு மும்பை அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. பும்ராவுடன் என்னை ஒப்பிடாதீர்கள். நான் இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் மேலும் 2018-ல் இருந்து என்னுடைய வாய்ப்புக்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என ஆகாஷ் பேசியுள்ளார்.