முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

#IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

ஐ.பி.எல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி திறமையான வீரர்களை கொண்டுள்ள போதிலும், அவர்களால் இன்னும் சில திறனை சரியாக பயன்படுத்த முடியவில்லை. இருப்பினும், இந்த இடத்திற்கு வருவதற்கு பேட்ஸ்மேன்கள் தனது ரன்களை தீ போல குவித்ததால், இந்தியன் பிரீமியர் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பு வாய்ந்ததாகவே உள்ளது.

 • 111

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  கே.எக்ஸ்.ஐ.பி-க்காக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் 10 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 211

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  1. ஷான் மார்ஷ் : ஷான் மார்ஷ் 2008ம் ஆண்டு பேரம் வாங்கியவர்களில் ஒருவராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வருகை தந்தார். மேலும், இவர் அதிக ரன் அடித்தவராக திகழ்ந்தவர். ஆஸ்திரேலிய இடது கை வீரரான இவர், 71 போட்டிகளில் 39.95 என்ற சராசரியுடன் 2477 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் விகிதமானது 132.74 என அற்புதமாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 311

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  2. டேவிட் மில்லர் : இடது கை ஆட்டக்காரர் இவர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 79 ஐ.பி.எல் போட்டிகளில், சராசரியாக 34.25 ஸ்ட்ரைக் ரேட் உடன் 1850 ரன்கள் எடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 411

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  3. கே. எல். ராகுல் : இந்திய தொடக்க ஆட்டக்காரரான இவர் கே.எக்ஸ்.ஐ.பி-க்காக போராடி வருகிறார். மேலும் இவர் 28 போட்டிகளில் 1252 ரன்கள் எடுத்துள்ளார். இவரிடம் ஈர்க்கக்கூடிய விஷயமாக சராசரி 54.43, ஸ்ட்ரைக் ரேட் விகிதம் 146.60 உள்ளது.

  MORE
  GALLERIES

 • 511

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  4. க்ளென் மேக்ஸ்வெல் : ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்காக பல சந்தர்ப்பங்களில் தனது வலிமையைக் காட்டியுள்ளார். இவர் 52 போட்டிகளில் 25.78 சராசரியாகவும், ஸ்ட்ரைக் வீதம் 167.27 ஆகவும் மொத்தம் 1186 ரன்கள் எடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 611

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  5. விருத்திமான் சஹா : இந்தியாவின் டெஸ்ட் விக்கெட் கீப்பரான சஹா, ஐ.பி.எல் போட்டிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் தனது திறமைகளை காட்டியுள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக, 57 போட்டிகளில் 24.77, சராசரியாக 1115 ரன்களை எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் நல்ல விகிதம் 131.95 ஆக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 711

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  6. குமார் சங்ககாரா : இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா கிங்ஸ் லெவன் பஞ்சாபில் ஒரு நிலையான செயல்திறன் கொண்டவர். அவர் 37 போட்டிகளில் 31.53 சராசரியாக 1009 ரன்கள் எடுத்தார் மற்றும் அவரின் ஸ்ட்ரைக் வீதம் 129.52 ஆகும்.

  MORE
  GALLERIES

 • 811

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  7. யுவராஜ் சிங் : 2007 மற்றும் 2011 உலகக் கோப்பையில் இந்திய அணி வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் ஆரம்ப சில ஆண்டுகளில், 51 போட்டிகளில் 959 ரன்கள் எடுத்துள்ளார். இது சராசரியாக 22.30 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் வீதம் 127.86 ஆகும்.

  MORE
  GALLERIES

 • 911

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  8. மனன் வோஹ்ரா : இளம் வலது கை வீரரான மனன் வோஹ்ரா, தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் மிகவும் நன்றாக விளையாடியுள்ளார். இவர் 45 போட்டிகளில் 24.53 என்ற புள்ளிகளிலும், 132.73 ஸ்ட்ரைக் வீதத்திலும் இதுவரை 957 ரன்கள் எடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1011

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  9. மந்தீப் சிங் : மற்றொரு திறமையான வலது கை வீரர் மந்தீப், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பல்வேறு போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவராக உள்ளார். ஏனெனில், இவர் 54 போட்டிகளில் 23.20 சராசரியிலும், 123.40 ஸ்ட்ரைக் வீதத்தில் 928 ரன்கள் எடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1111

  #IPL2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த சிறந்த 10 வீரர்கள்...

  10. கிறிஸ் கெய்ல் : வெஸ்ட் இண்டீஸ் பவர்ஹவுஸ் கிறிஸ் கெய்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 2018ம் ஆண்டில் இணைந்தார். அதன் பின்னர் அவரது பெயரை பல்வேறு போட்டிகளில் முத்திரை குத்தியுள்ளார். இவர் 24 போட்டிகளில் 40.85 என்ற புள்ளிகளில் 858 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கெயிலின் ஸ்ட்ரைக் வீதம் 150.26 ஆகும்.

  MORE
  GALLERIES