2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க வந்த உலகின் நம்பர் ஓன் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்ததால் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை விதித்தது அவரது விசாவையும் அந்நாட்டு அரசு ரத்து செய்தது.இதனால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 சீசனில் மொத்தம் 22 சர்வதேச போட்டிகளில் விளையாடிய மந்தனா (25 வயது) 855 ரன் குவித்து அசத்தினார் (சராசரி 38.86 ரன், 1 சதம், 5 அரை சதம்). பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான ரச்சேல் ஹேஹோ பிளின்ட் டிராபி வழங்கப்பட உள்ளது.