உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இடது கை பெரு விரலில் ரோஹித்திற்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது காயத்திற்கு பெரு விரலில் டேப்பை சுற்றும் ரோஹித் சர்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது காயத்தை தொடர்ந்து ரோஹித்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதற்கட்ட பரிசோதனையில் மிகப்பெரிய காயம் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ரோஹித்தின் காயம் தொடர்பாக பிசிசிஐ எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் நாளை அவர் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.