கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் சகோதரியை நெட்டிசன்கள் ஆபாச முறையில் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அத்துமீறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் அதிருப்தியடைந்த பெங்களூரு ரசிகர்கள் என்று கூறப்படும் நபர்கள், சமூக வலைதளங்களில் சுப்மன் கில் சகோதரியை கடுமையாக விமர்சித்தனர். சுப்மன் கில் சகோதரி ஷஹ்னீன் கில் மீது ஆபாச முறையில் தரம் தாழ்ந்து இந்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. நெட்டிசன்களின் இந்த அத்துமீறலை பல்வேறு பிரபலங்கள் கண்டித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.