சச்சினை நான் முதன் முறையாக பார்த்த போது அவருக்கு வயது 17. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்து விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது எனது தாயை அழைத்து வர விமானநிலையத்திற்கு வந்தேன். அப்போது நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தோம். அவரை பார்த்த தருணம் நான், சச்சினை திருமணம் செய்ய விரும்பினேன். பின்னர் நாங்கள் ஒரு பொதுவான நண்பர் மூலம் சந்தித்தோம்.
அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைக்க ஒரு பத்திரிகையாளராக நடிக்கும்படி அவர் என்னிடம் கூறினார். அவரை நேர்காணல் செய்ய வரும் ஒரு பத்திரிகையாளராக சச்சின் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார். இந்த நேரத்தில் சச்சின் சற்று பயந்தான். சல்வார் கமீஸ் அணிந்து முதல் முறையாக வீட்டிற்கு சென்றேன் என்றார் அஞ்சலி.