மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோலி பேட்மின்டன் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றன. கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து 2017-இல் இருவரும் திருமணம் முடித்தனர். கிரிக்கெட் மைதானம் உள்பட பொது இடங்களில் தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்த விராட் கோலி தவறியது இல்லை. இருவரும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. இதனால் விளம்பர நிறுவனங்களின் டாப் சாய்ஸாக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் பேட்மின்டன் விளையாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. கிரிக்கெட், சினிமாவை தவிர்த்து அனுஷ்காவும் விராட் கோலியும் பல விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.