பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கான ஒரு ஆண்டு தடைகாலம் முடிந்து மீண்டும் பேட்டிங்கில் அசத்தி வரும் ஆஸ்திரேலிய ரன் மிசின் ஸ்டீவன் ஸ்மித் முதல் இடத்தைக் கைப்பற்றி தனது பலத்தை நிரூபித்துள்ளார். முதல் பத்து இடங்களில் இந்திய வீரர்கள் ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே 8, 9, 10 இடங்களை பிடித்துள்ளனர்.
இதேபோல் பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தான் இடம்பிடித்துள்ளார். அஸ்வின் 765 புள்ளிகளுடன் 9 இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா 756 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளார்.