ஆனாலும் இப்போது தண்டமாகிவிட்ட பவுலர் இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பை கொடுத்து விட்டுத்தான் சிராஜை அணியில் எடுக்கின்றனர். கான்பூர் டெஸ்ட் போட்டியில் இவர் இருந்திருந்தால் அந்த கடைசி விக்கெட்டை விழித்தியிருப்பார் இந்தியாவும் தொடரை 2-0 என்று வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 24 புள்ளிகளை கூடுதலாகப் பெற்றிருக்கும்.
சிராஜை இனி அணியில், லெவனில் எடுத்தேயாக வேண்டும் இதனால் இஷாந்த் சர்மாவை முடிந்து போய் விட்டார் என்று நான் கூறவில்லை. சிராஜ் போன்ற ஒருவர் அணிக்குள் வந்து இந்திய அணிக்காக இப்படி ஆடுவதற்கான நேரம் தகைந்து வந்துள்ளது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் நிச்சயம் சிராஜின் சேவை இந்தியாவுக்கு தேவை” என்கிரார் டேனியல் வெட்டோரி.