இந்த சதத்த்தின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த என்ற வீரர் என்ற பெமையை விராட் கோலி தன்வசப்படுத்தி உள்ளார். இதற்கு முன் சச்சின் இலங்கை அணிக்கு எதிராக 8 சதமடித்து இருந்தார். தற்போது விராட் 9 சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
அதே போல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக 9 சதங்களை விளாசியுள்ளார் விராட். இதன் மூலம் இரண்டு எதிரணிகளுக்கு எதிராக 9 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 சதங்கள் அடித்து இருந்தார். ஆனால் விராட் இரு அணிகளுக்கு எதிராக 9 சதங்கள் அடித்துள்ளார்.